ராகுல் ராசியில்லாதவர்: பாஜக

இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதை பாஜக அமைச்சர் மக்களவையில் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார். அப்போது இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, அமெரிக்காவில் ராகுல் பேசியதை விமர்சித்துள்ளார்.

மக்களவையில் சம்பித் பேசியதாவது “அமெரிக்காவில் ராகுல் முன்வைத்த இந்தியா குறித்த கருத்துகளின் பிம்பத்தால் ஒட்டுமொத்த நாடும் புண்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அவருடைய ஆணவம் மக்களவையிலும், அமெரிக்காவில் அவரது செய்த முட்டாள்தனத்திலும் பிரதிபலிக்கிறது.

சீதாராம் யெச்சூரி காலமானார்

சாதிக்கு சாதியே எதிராக இருக்கும்போது, மதத்திற்கு மதமே எதிராக இருக்கும்போது, வெளிநாட்டில் சீக்கியர்களைப் பற்றி கடுமையான கருத்துக்கள் கூறப்படும்போது, அது துரோகம் என்றே அழைக்கப்படும். வெளிநாட்டில் இந்தியாவை சரியான கண்ணோட்டத்தில் எவ்வாறு முன்வைப்பது என்று தெரியாதவர்களையும், தாய்நாட்டை எதிர்க்க முயற்சிக்கும் நபர்களையும் நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ராசியில்லாதவர் யார் என்று தெரியுமா? பப்பு எதைத் தொட்டாலும், அது அழிவையே சந்தித்தது. ராகுல் வந்ததிலிருந்துதான் காங்கிரஸ் தோல்விகளை சந்தித்து வருகிறது.

அதை எழுத்துப்பூர்வமாகக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் இருக்கும்வரை காங்கிரஸ் உயராது. ராக்கெட் ஏவப்படாது, ஏனெனில் அதில் எரிபொருள் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

போதையில் பெண் மருத்துவரை இழுத்து… அரசு மருத்துவமனையில் நோயாளி அட்டூழியம்!

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி