ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தோல்பூரில் நடந்த சாலை விபத்தில் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

நெதன்யாகு எச்சரிக்கை… அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

காயமடைந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான மருத்துவ சேவையை உறுதி செய்ய மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பகவான் ஸ்ரீராமரைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் எக்ஸ் தளப் பதிவில், தோல்பூரில் நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்