ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூா் மாவட்டத்தில் பரௌளி கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் தோல்பூரில் இருந்து ஜெய்பூா் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கோர விபத்துக்குள்ளானது.

இதில், 3 வயது பெண் குழந்தை என 8 சிறாா்கள், லாரி ஓட்டுநர் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலியாகினர். படுகாயமடைந்த ஒருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையும் படிக்க |சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

பிரதமர் இரங்கல்

இந்த நிலையில், ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. குழந்தைகள் உள்பட பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த வேதனையை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தோல்பூரில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!