ராஜஸ்தான்: போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

ஜெய்ப்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்கள் தினேஷ் குமார் மற்றும் பிரியங்கா குமாரி என அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்கள் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுதிய நிலையில் அவர்களுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

*SI भर्ती पेपर लीक में सगे भाई-बहन गिरफ्तार:* एग्जाम से पहले पर्चा खरीदकर हुए पास, जयपुर की पुलिस अकेडमी में कर रहे थे ट्रेनिंग https://t.co/pZyrrX6MU5
रोजाना नए राज् खुल रहे है तो आपको क्या लगता है
SI का पेपर रद्द होना चाहिए या नहीं?

— SDM Suresh K.Meghwal (RAS) (@sdmsureshkm_) October 6, 2024

வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக பயிற்சி எஸ்.ஐ.க்கள் பிரியங்கா மற்றும் அவரது சகோதரர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஓ.ஜி கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற கசிந்த வினாத்தாளைப் பயன்படுத்தினர். இந்த நிலையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஃபியா மன்னன் பூபேந்திர சரணின் சகோதரர் கோபால் சரண் மூலம் வினாத்தாளை சகோதரர்கள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவு!

கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014ல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டுள்ளார். தற்போது இருவரும் போலீஸ் காவலில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விசாரனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்களை கைது செய்துள்ள நிலையில், 2021 போலீஸ் தேர்வை மறுஆய்வு செய்யவும், தேர்வை ரத்து செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் அரசு அமைச்சரவைக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

Related posts

‘Apologising Does Not Diminish A Person’s Status,’ Says BJP Leader Harnath Singh Yadav While Advising Salman Khan To Resolve Blackbuck Issue

JSW Energy Signs PPA For 700 MW ISTS/STU-Connected Solar Capacity With NTPC

Toyota Unveils Limited Festival Edition of Urban Cruiser Hyryder in India