ராஜிநாமா செய்யத் தயார்: மமதா பானர்ஜி

கொல்கத்தா மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததாகத் தெரிகிறது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவர்களுடன் அரசின் 32 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தை திறந்த வெளியில் நடத்த இன்று திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, “மருத்துவர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருந்தோம், அவர்கள் வருவார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் இரண்டு மணி நேரமாக வரவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்பதால், அதனை நேரடி ஒளிப்பரப்பாகக் காட்ட முடியாது’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடலாம்..! -தமிழிசை

மேலும், இளம் மருத்துவர்களின் பணி நிறுத்தத்தால், 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், போராட்டம் செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது; இன்று ஆர்.ஜி. கர் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டும். மக்களுக்காக, நான் ராஜிநாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து