‘ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும்’ – பாகிஸ்தான் ராணுவ தளபதி

நாட்டு மக்களின் நம்பிக்கையே ராணுவத்தின் மிகப்பெரிய சொத்து என பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் 78-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் கலந்து கொண்டு ராணுவ படையினரிடம் உரையாற்றினார்.

அபோது பேசிய அவர், ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும் என குறிப்பிட்டார். நாட்டு மக்களின் நம்பிக்கையே பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய சொத்து என்றும், இந்த நம்பிக்கையை எந்தவொரு சக்தியாலும் நாட்டை சீரழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் டிஜிட்டல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகளுக்கு மத்தியில் தேசிய ஒற்றுமையை காப்பது முக்கியமானது என்று அவர் கூறினார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்