ராணுவ வீரர்களுடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பாஜகவை சாடிய ராகுல், பிரியங்கா!

மத்திய பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளைத் தாக்கி பெண் நண்பர்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாஜகவைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்காவும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ம.பி.யில் ராணுவ வீரர்களைத் தாக்கிய பெண் நண்பர்களை வன்கொடுமை செய்த விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்துவதாகும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு இல்லை. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பற்றியும், பாஜக அரசின் எதிர்மறையான அணுகுமுறையும் மிகவும் கவலை அளிக்கிறது.

குற்றவாளிகளின் இந்த அடாவடித்தனம், நிர்வாகத்தின் மொத்த தோல்வியைக் காட்டுகிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், பெண்களின் சுதந்திரத்துக்குத் தடையாக உள்ளது. பெண்களைப் பாதுகாக்கத் தவறிய சமூகமும், அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும், தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? நாளை தீர்ப்பு!

இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட பதிவில்,

ராணுவ அதிகாரிகளைப் பிணைக் கைதியாக வைத்து பெண் ஒருவர் வன்கொடுமை செய்த சம்பவங்களும், உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் பெண்ணின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களும் இதயத்தை உலுக்குவதாக உள்ளது.

நாட்டில் ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் வன்கொடுமைக்குப் பலியாகி வருகின்றனர். வீட்டிலிருந்து வெளியிலும், அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் சென்றுவிட்டது.

நாட்டின் மக்கள்தொகையில் பாதிப்பேர் பாதுகாப்பற்றவர்கள் என்பது மட்டுமல்ல, இதுபோன்ற கொடூரச் செயல்களால் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பெண்களின் மனவுறுதியும் உடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் பெரிதாகப் பேசுகிறார். ஆனால் நாடு முழுவதும் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்கான ஏங்குகின்றனர். இந்த காத்திருப்பு எப்போது தீரும்? என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

வியத்நாம் புயல்: 200ஐ நெருங்கிய பலி!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம் கேட் சுற்றுலாத் தலத்துக்கு இரண்டு ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பர்கள் இருவருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளனர்.

புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஒரு ஜோடி காரின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. மற்றொரு ஜோடி தடுக்க முயற்சித்த போது, அவர்களையும் தாக்கியுள்ளனர்.

அதில், ஒரு பெண்ணை மட்டும் துப்பாக்கி முனையில் காரில் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு ரூ. 10 லட்சம் எடுத்து வருமாறு மற்றவர்களிடம் கூறியுள்ளனர். இதனிடையே, உடனடியாக ராணுவத்தின் உயர் அதிகாரிக்கு சம்பவம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துள்ளனர். ஆனால், அதற்குள் காருக்குள் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 6 பேரும் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

Related posts

தேவரா வெளியீட்டு டிரைலர்!

வார இறுதியில் சந்தித்த 3 நண்பர்கள் பலி! அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை: பிசிசிஐ