ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்த ஒப்புதல்!

ராபி பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (அக். 16) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடுகிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.300, மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது.

கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது.

பருப்புக்கு ரூ.210, கோதுமைக்கு ரூ.150, குங்குமப்பூவுக்கு ரூ.140, பார்லிக்கு ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!