ராமநாதபுரம்: நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே இன்று அதிகாலையில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடலாடி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உடல்நலம் சரியில்லாத பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை சென்றுவிட்டு வாடகை காரில் தங்கச்சி மடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முன்னால் சென்ற அரசுப்பேருந்து திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை, ஒரு பெண் மற்றும் டிரைவர் ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || ராமநாதபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துகாரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி – அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்துராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சி மடம் நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது… pic.twitter.com/QHTKVnRoq5

— Thanthi TV (@ThanthiTV) September 8, 2024

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!