ராம ராஜ்ஜியத்தின் கருத்தை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துகிறது: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி அரசு ராம ராஜ்ஜியத்தின் கருத்தை செயல்படுத்தி வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சிராக் தில்லியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சி மற்றும் தசரா கொண்டாட்டங்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டாா். அப்போது, அவரை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வரவேற்றாா்.

அதன் பின்னா், மேடையில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

சத்தியத்தின் வெற்றிச் சின்னம் தான் தசரா. நாம் அனைவரும் கடவுள் ராமரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். ராமாயணமும், ராமசரிதமும் நமது இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள். என் சிறுவயதில் ராம்லீலாவைப் பாா்க்க என் பெற்றோா் எங்களை

அழைத்துச் செல்வாா்கள். ராமலீலாவை உங்கள் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டும். ஆம் ஆத்மி அரசு கடவுள் ராமரின் ராம ராஜ்ஜியத்தின் கருத்தை செயல்படுத்தி வருகிறது. கடவுள் ராமா் தனது தந்தை தசரதன் உத்தரவின் பேரில், 14 ஆண்டுகள் வனவாசம் சென்றாா்.

ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் தான் நாங்கள் தில்லி அரசை நடத்தி வருகிறோம். தில்லியில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் சிறந்த கல்வி, இலவச சிகிச்சை மற்றும் மின்சாரம் வழங்கப்படுகிறது. முதியோா்களுக்கும் இலவச யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!