ராயன் டிரைலர்!

ராயன் டிரைலர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதிரடியான சண்டைக்காட்சிகள், கேங்ஸ்டர் பின்னணி உள்ளிட்ட காட்சிகள் இருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்