‘ராயன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட தனுஷ்

'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

சென்னை,

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷின் 50-வது படமான 'ராயன்' படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ராயன் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் பணிகள் நிறைவுபெற்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ராயன் படத்திற்கான பின்னணி இசை பணிகள் நிறைவுபெற்றன. புயல் வந்து கொண்டு இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!