ரிஷப் பந்த்தை அமைதியாக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

ரிஷப் பந்த் மிகுந்த தாக்கக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனவும், இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவரை அமைதியாக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

ரிஷப் பந்த்தை அமைதியாக்க வேண்டும்

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ரிஷப் பந்த மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் எனவும், எதிர்வரும் தொடரில் அவரை அமைதியாக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோதும் ரிஷப் பந்த மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த முறை அவரை அமைதியாக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும். நம்ப முடியாத அளவுக்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடக் கூடியவர் ரிஷப் பந்த்.

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்லும் வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். எங்களது அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் அவ்வாறு இருக்கிறார்கள். இதுபோன்று அதிரடியாக விளையாடுபவர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக சிறிது நன்றாக பந்துவீசவில்லையென்றாலும், அவர்கள் எளிதில் ரன்கள் குவித்து ஆட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்றார்.

ரிஷப் பந்த்தின் பங்களிப்பு

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ரிஷப் பந்த், 12 இன்னிங்ஸ்களில் 624 ரன்கள் சேர்த்தார். அவரது சராசரி 62.40 ஆக இருந்தது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 159*. 2021 ஆம் ஆண்டு காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் குவித்த 89 ரன்கள், காபாவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய காரணம் என்ன? ரிஷப் பந்த் பதில்!

கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கடைசியாக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!