ரூ.100 கோடி முறைகேடா? – முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு செக்

‘ஆடுதாம் ஆந்திரா’ நிகழ்ச்சியில் ரூ.100 கோடி முறைகேடா? – முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு புதிய சிக்கல்!

ரோஜா

நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய ரூ 100 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. கடந்த இரண்டு முறை நகரி தொகுதிகள் வெற்றி பெற்று எம்எல்ஏ-வான நடிகை ரோஜா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும் அம்மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

விளம்பரம்

இந்நிலையில், நடிகை ரோஜா அமைச்சராக இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக, ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு ரூபாய் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக தெரிவித்திருந்தது.

இந்த நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், விஜயவாடா சிபிஐ அதிகாரிகளிடம் ஆத்யா-பாத்யா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:
ரூ.78,000 மானியம் வாங்குவது எப்படி..? பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

விளம்பரம்

இதனிடையே நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என தெலுங்கு இளைஞரணி ஆந்திர மாநில தலைவர் ரவி நாயுடு தெரிவித்துள்ளார். சிபிசிஐடியிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Actress Roja

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்