ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக பொறுக்கேற்க உள்ளார். அத்துடன், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியிலும் தெலுங்கு தேசம் கட்சி இடம்பிடித்து இருப்பதால், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு வெறும் 12 நாட்களில் ரூ.1225 கோடி வரை உயர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குகள் 12 நாட்களில் 105% அளவுக்கு அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.1636 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், அதில் பங்கு வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ.724 கோடி அதிகரித்துள்ளது. தற்போது ந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.2391 கோடியாக உள்ளது.

விளம்பரம்

Also Read :
நடுத்தர மக்களுக்கு இனிப்பான செய்தி.. மோடி அமைச்சரவை முக்கிய முடிவு.. என்ன தெரியுமா?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளான ஜூன் 3ஆம் தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.424க்கு வர்த்தகம் ஆன நிலையில், தற்போது ஒரு பங்கின் விலை ரூ.660ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவுகள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இயங்கி வருகின்றன.

விளம்பரம்

தற்போது ஹெரிடேஜ் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 2,26,11,525 கோடி பங்குகள் வைத்திருக்கிறார். இவர்களது மகன் நாரா லோகேஷிடம் 1,00,37,453 கோடி பங்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
N Chandrababu Naidu

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்