ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி: ஐடிஐ மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு

ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி: ஐடிஐ மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு

சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐடிஐ கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக துணை மேலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஐடிஐ பிரிவில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதனடிப்படையில், எம்எம்வி, மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர், டர்னர், பெயின்டர் ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு ரூ.14 ஆயிரம் மாத உதவித் தொகையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாணவர்களை கலந்து கொள்ளவைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு