ரூ. 15 ஆயிரம் கோடியில் ராணிப்பேட்டை – சென்னை சாலை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்

ராணிப்பேட்டை மற்றும் சென்னை இடையே ரூ. 15 ஆயிரம் கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டி:

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை, ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.,துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் – சோழபுரம், சோழபுரம் – சேத்தியாதோப்பு சாலை பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. மொத்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதான் சிக்கலாக இருந்தது.

மேலும், கட்டுமான மூல பொருள்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது. தற்போது 5 சதவிகிதப் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

இத்தனைத் தடைகளை தாண்டியும், சாலை மிகவும் தரமாக அமைந்து எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி. இந்த மொத்த பணிகளையும் மத்திய அரசு ஊழல் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் செய்துள்ளது.

மறதி நோய் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படுமா? – நம்பிக்கையும் உண்மையும்!

ஆந்திர, தமிழக எல்லையில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை – சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம், சென்னை, பெங்களூரு, ஆந்திரம் இடையிலான கனரக வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மதுரவயல் ரிங்ரோடு, ஸ்ரீபெரும்புதுார் – சமுத்திரவயல், ராணிபேட்டை தொழிற்சாலைகளை இணைக்கும் சென்னை – பெங்களூரு விரைவு சாலையை இணைப்பதற்கான சாலைப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு 2024ம் ஆண்டு வரை 451 திட்டங்கள் 9,300 கி.மீ., துாரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி செலவில் சாலைகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை, அரசு நிலம் கையாகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிகளவில் பணத்தை நாங்கள் செலவு செய்ய தயராக உள்ளோம். சாலை கட்டுமானத்தை அமெரிக்கா போன்றொரு தரத்திற்கு நிகராக கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்