ரூ.20 லட்சம்.. முத்ரா கடன் வரம்பை இரட்டிப்பாக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு

PM Mudra Yojana | ரூ.20 லட்சம்… முத்ரா கடன் வரம்பை இரட்டிப்பாக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப்படம்

மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் ஜூலை 23 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பிரதமர் முத்ரா கடன் திட்டம் குறித்து பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், உத்தரவாதம் இல்லாத கடனின் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீங்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், முத்ரா கடன் திட்டம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். மேலும் முத்ரா கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

விளம்பரம்

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூலம் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்குங்கள்:

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டு தொடங்கியது. நிதி நெருக்கடியால் சொந்தமாக தொழில் தொடங்க முடியாதவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரசு கடன் வழங்கப்படுகிறது. பிரதமர் முத்ரா யோஜனா மூலம், நாட்டில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த அரசு விரும்புகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இந்தக் கடனைப் பெறலாம், ஆனால் இதற்கு சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

விளம்பரம்

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கடன்:

பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ், ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய மூன்று வகை கடன்கள் உள்ளன. ஷிஷு கடனின் கீழ் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. கிஷோர் கடனில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் கடனில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்பட்டு, தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

தகுதி நிபந்தனைகள்:

விண்ணப்பதாரரின் வயது 18 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கடன் செலுத்துபவராக இருக்கக்கூடாது மற்றும் நல்ல கிரெடிட் பதிவுகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் முன்மொழியப்பட்ட செயல்பாட்டைச் செய்வதற்குத் தேவையான திறன்கள்/அனுபவம்/அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். முன்மொழியப்பட்ட செயல்பாட்டின் தன்மை மற்றும் அதன் தேவையின் அடிப்படையில் கல்வித் தகுதி இருக்க வேண்டும். இந்த கடன் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விளம்பரம்

PM முத்ரா கடன் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

PM முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.

1. முதலில் www.mudra.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்பு பக்கத்தில் ஷிஷு, தருண் மற்றும் கிஷோர் ஆகிய மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விருப்பத்தை தேர்வு செய்யவும்.
3. இதற்குப் பிறகு தொடர்புடைய விண்ணப்பக் கடன் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
5. படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தேவையான தகவல்களையும் கவனமாக நிரப்பவும்.
6. விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
7. முழுமையாக பூர்த்தி செய்த பிறகு, இந்த விண்ணப்பப் படிவத்தை உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும்.
8. வங்கி ஒப்புதலுக்குப் பிறகு, முத்ரா கடனின் பலன் உங்களுக்கு வழங்கப்படும்.

விளம்பரம்

Also Read |
பட்ஜெட்டுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை… அதிகரிக்கும் தேவை… நிபுணர்கள் சொல்வதென்ன?

PM முத்ரா கடன் வட்டி விகிதங்கள்:

PM முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். வட்டி விகிதம் கடன் வாங்குபவரின் வணிகத்தையும் அதனுடன் தொடர்புடைய அபாயத்தையும் சார்ந்துள்ளது ஆகும்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
Nirmala Sitharaman

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்