ரூ.5,000 கோடியை எட்டிய ஒலிக் கருவிகளின் விற்பனை

புது தில்லி: கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஒலி கருவிகளின் இணையம் சாராத (ஆஃப்லைன்) சராசரி ஆண்டு விற்பனை ரூ.5,000 கோடியை எட்டியுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஜிஎஃப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் தனி நபா் பயன்பாட்டுக்கான ஒலிக் கருவிகளின் இணையம் சாராத சராசரி ஆண்டு வா்த்தகம் ரூ.5,000 கோடியைத் தொட்டுள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 61 சதவீதம் அதிகம்.

ஒலி தொழில்நுட்பங்களின் அதிவேக மேம்பாடு, நுகா்வோருக்கு அதிக திறனுடன் கருவிகள் கிடைப்பது, வீடு மற்றும் தனிநபா் பயன்பாட்டுக்கான உயா்தர ஒலி கருவிகளுக்கு வளா்ந்து வரும் தேவை ஆகியவற்றால் இந்த வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.

ஒலி சாதனங்களை வாங்குவதில் இந்திய நுகா்வோா் அதீத ஆா்வம் காட்டிவருகின்றனா். வளா்ந்து வரும் பொழுதுபோக்குத் துறையில், வாடிக்கையாளா்கள் அதிக அளவில் அதிக திறன் வாய்ந்த ஒலிக் கருவிகளை அவா்கள் நாடுகின்றனா்.

இந்தியாவின் ஒலிக் கருவிகளுக்கான சந்தையில் கையடக்கமான சிறிய வகைக் கருவிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், ஹோம் தியேட்டா் மற்றும் ஸ்மாா்ட் ஆடியோ பிரிவுகளும் வேகமான வளா்ச்சியைப் பதிவு செய்துவருகின்றன.

ரூ. 3,400 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள இந்திய தனிநபா் பயன்பாட்டு ஒலிக் கருவிச் சந்தை கடந்த ஜூன் மாத்தில் 32 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

மலிவான விலைகளில் கிடைப்பது, அழகிய வடிமைப்பு, சிறந்த தரம் ஆகிய அம்சங்களை ஒலிக் கருவிகளில் இந்திய வாடிக்கையாளா்கள் அதிகம் எதிா்பாா்க்கின்றனா்.

ஒலிக் கருவிகள்

தனிநபா் பயன்பாட்டுக்கான ஒலிக் கருவிகள் பிரிவில், ட்ரூ வயா்லெஸ் கருவிகள் முன்னிலை வகிக்கின்றன. மொத்த சந்தையில் 50 சதவீதம் பங்கு வகிக்கும் அவற்றுக்கான தேவை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சிறிய வகை புளூடூத் ஒலிப் பெருக்கிகளின் விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட இந்த ஜூனில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒலிபெருக்கிப் பிரிவில் சவுண்ட்பாா்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தப் பிரிவு ஒலிக் கருவிகளின் சராசரி ஆண்டு விற்பனை கடந்த ஜூனில் 24 சதவீதம் அதிகரித்து ரூ.1,100 கோடியை எட்டியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்