ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் வாங்கிய நடிகர் அஜித்?

நடிகர் அஜித்குமார் துபாயில் ரூ 9 கோடி மதிப்புள்ள புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்கிற இரு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில், விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த பின், நடிகர் அஜித்குமார் ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர், இதற்கு முன்பாக ரூ.34 லட்சம் மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் போன்ற 6-க்கும் மேற்பட்ட அதிக மதிப்புமிக்க கார்களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"குட் பேட் அக்லி " திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் இரண்டு படங்களில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களுக்காகவும் பிரசாந்த் நீல் மொத்தம் 3 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெகுவிரைவில் அஜித் – பிரசாந்த் நீல் இணையும் முதல் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் பைக் ரேசிங் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இதனாலேயே அவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பைக் ரைடிங் சென்று விடுவார்.

View this post on Instagram

A post shared by Actor Ajithkumar (@ajithkumar_offll)

கார் பிரியரான அஜித், 'விடாமுயற்சி' படப்பிடிப்பின்போது ஓய்வு நாள்களில் பந்தயக் கார்களை ஓட்டியது குறிப்பிடத்தக்கது

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!