ரெட் அலர்ட் வாபஸ்! சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்!

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னையில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இன்று (அக்.17) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:சென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்இன்று வழக்கம் போல இயங்கும் என்றும், மழை நிவாரண முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!