ரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

ரெயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்; புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவை உள்ளடக்கிய தென்மேற்கு ரெயில்வேக்கு 1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவின் புதிய வழித்தடங்களுக்கு 2286 கோடி அறிவித்துவிட்டு இப்பொழுது 1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 971 கோடு அறிவித்து விட்டு 301 கோடி மட்டுமே தந்துள்ளது. #வஞ்சிக்கப்படும்_தமிழ்நாடு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்