ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜெயிலில் இருந்து தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி

மும்பை,

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த தொடர் ரெயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்தனர். 824 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் முகமது சாஜித் அன்சாரி. இவர் நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மும்பையில் உள்ள கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வருகிறார். 7/11 train blasts case: HC permits convict to appear for LLB exam from Parison மும்பை வந்து தேர்வு எழுத கோர்ட்டு அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் சிறை துறையினரால் அவரை நாசிக்கில் இருந்து மும்பைக்கு சரியான நேரத்தில் தேர்வுக்கு அழைத்துவர முடியவில்லை. இதனால் அவரால் கடந்த மாதம் நடந்த 2 தேர்வுகளை எழுத முடியாமல் போனது.

இது தொடர்பாக முகமது சாஜித் அன்சாரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு முகமது சாஜித் அன்சாரிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதா? என மும்பை பல்கலைக்கழகத்திடம் கேட்டது. மும்பை பல்கலைக்கழகம் கைதியை ஜெயிலில் இருந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யலாம் என சிபாரிசு செய்தது. இதை ஏற்றுக்கொண்ட மும்பை ஐகோர்ட்டு கைதி முகமது சாஜித் அன்சாரியை நாசிக் ஜெயிலில் இருந்து சட்டப்படிப்பு தேர்வுகளை எழுத அனுமதி வழங்கியது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்