ரெயில் பயணத்தின்போது படுக்கை உடைந்து விழுந்து பயணி உயிரிழப்பு

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலி கான்(வயது 62). இவர் கடந்த 15-ந்தேதி கேரளாவில் இருந்து டெல்லி வரை செல்லும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் பயணம் செய்தார். திருச்சூர் ரெயில் நிலையத்தில் தனது நண்பருடன் ரெயிலில் ஏறிய அலி கான், தனது இருக்கையில் உறங்கியுள்ளார்.

அந்த ரெயில் தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே வந்தபோது, அவருக்கு மேல் அடுக்கில் இருந்த படுக்கை உடைந்து அலி கான் மீது விழுந்துள்ளது. இதில் அலி கானின் கழுத்து எலும்பு முறிந்தது. இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக அலி கானை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அலி கான், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அலி கானின் உடல் நேற்று இரவு மலப்புரத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்