ரௌடி ஆல்வின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி: கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

கோவை: கோவையில் சனிக்கிழமை சுட்டுப்பிடிக்கப்பட்ட ரௌடி ஆல்வின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும், அச்சத்தை ஏற்படுத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கான யோகா பயிற்சி நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை கொடிசியா மைதானத்தில் ரெளடி ஆல்வின் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை அதிகாலை கிடைத்த ரகசிய தகவலை அடுத்து , அவரை பிடிக்க ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் முற்பட்டனர். அப்போது ரெளடி ஆல்வின், காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சென்னையில் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடக்கம்!

சுட்டுபிடிக்கப்பட்ட ரெளடி ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரெளடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஆல்வினை பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பிச் சென்று விட்டார்.

இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ரெளடி ஆல்வின் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது துப்பாக்கியை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார்?, யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்