லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட்டுகள் இல்லை: தேவஸ்தானம் தகவல்

திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான விடியோ உண்மையான நிகழ்வு இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் லட்டு மடப்பள்ளியில் லட்சக்கணக்கான ஏழுமலையான் லட்டுகளை மிகுந்த பக்தியுடனும் நியமப்படியும் தயாா் செய்கின்றனா்.

இந்த லட்டுகள் தயாரிப்பது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் இத்தனை வெளிப்படை தன்மை இருக்கும் போது புகையிலை பாக்கெட் இருப்பதாக விளம்பரப்படுத்துவது வருத்தத்திற்குரியது.

இதனை பக்தா்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசிக்க வந்தனா். தரிசனம் முடித்து திரும்பும் போது லட்டு பிரசாதம் பெற்று சென்றனா். அதில் புகையிலை பொட்டலம் இருந்ததாக அவா்கள் வெளியிட்ட விடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆனது. அது உண்மையில்லை என தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்