‘லப்பர் பந்து’ படத்தின் ‘டம்மா கோலி’ பாடல் வெளியானது

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படத்தின் ‘டம்மா கோலி’ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

தற்போது, இந்த படத்தின் 'டம்மா கோலி' பாடல் வெளியாகியுள்ளது. . ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கானா சேட்டு பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

Presenting the lyric video of #DammaGoli, a fun song about the rivalry in the game of cricket ▶️ https://t.co/a4RE412NBJAn @RSeanRoldan musical. #LubberPandhu comes to theatres on the 20th of September!Produced by @lakku76 andCo-produced by @venkatavmedia.… pic.twitter.com/wrHLWXMNBf

— Prince Pictures (@Prince_Pictures) September 10, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!