‘லப்பர் பந்து’ படத்தை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி

'லப்பர் பந்து' திரைப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'கனா, எப்.ஐ.ஆர்' படங்களில் இணை இயக்குனர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை 'சர்தார், காரி, ரன் பேபி ரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் தயாராகி உள்ளது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் 'டம்மா கோலி', மற்றும் சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் ஆகியவை வெளியாகி உள்ளன. இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தப் படத்தினை பாராட்டியுள்ளார். அதில் 'லப்பர் பந்து படத்தை பார்த்தேன். இது தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி அற்புதமாக எடுத்துள்ளனர். ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளார்கள்.

நானும் லப்பர் பந்து, டென்னிஸ் பந்து விளையாடித்தான் கிரிக்கெட் விளையாட வந்தேன். இதனால், என்னால் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. அற்புதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். தமிழ்ப் படங்களில் இந்தப்படம் நன்றாக மதிப்பிடப்படும்' என்று பாராட்டி பேசியுள்ளார். இது குறித்த பதிவை படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Big thanks to Indian cricketer and our pride of TN, @chakaravarthy29 for his lovely and encouraging words after watching #LubberPandhu. A huge boost to our entire team The film arrives in theatres on the 20th of September!Produced by @lakku76 andCo-produced by… pic.twitter.com/vh1yVF74CZ

— Prince Pictures (@Prince_Pictures) September 17, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!