‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் நானும் ரவுடி தான் என்ற படம்தான் விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எல்.ஐ.கே.' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டியின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி