லாபதா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கக் கூடாது: இயக்குநர் வசந்த பாலன்

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்த பாலன். கடைசியாக வந்த அநீதி திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு ‘ஆஸ்கா்’ விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் ஹிந்தி மொழியில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் அனுப்பப்படுகிறது.

மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன.

இதையும் படிக்க:லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது:

லாபதா லேடீஸ் எனும் இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரசியத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு ஃபீல் குட் டிராமா திரைப்படம்.

ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

https://www.facebook.com/share/p/X6ohf3wG9zJQuyZw/?mibextid=xfxF2i

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!