லாரி ஓட்டுனா ரூ.25 ஆயிரம்… வீடியோ போட்டா ரூ.10 லட்சம்…

லாரி ஓட்டுனா ரூ.25 ஆயிரம்… வீடியோ போட்டா ரூ.10 லட்சம்… டிரைவருக்கு ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்!

யூடியூப்

யூடியூப் பிரபலமாக மாறிய லாரி ஓட்டுநர், ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுவதில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். வருமானத்துக்கு தான் இந்த வேலை. ஆனால் சமைக்கிறது தான் ரொம்ப பிடிச்சது என சுற்றி உள்ளவர்களிடம் எப்போதும் ராஜேஷ் ரவானி கூறிக்கொண்டே இருப்பாராம்.

அப்போது, சிலர் கூறிய ஆலோசனைகளின் படி தோன்றியதுதான் இந்த டியூடியூப் வாழ்க்கை என்று கூறுகிறார் ராஜேஷ் ரவானி. சமையலில் இருந்த ஆர்வத்தால் R Rajesh Vlogs என்ற யூடியூப் சேனலை அவர் தொடங்கினார். முதலில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும், தனக்கென ஒரு தனி பாணி உருவாக்கிக் கொண்ட ராஜேஷுக்கு தற்போது யூடியூப்பில் சுமார் 18 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

விளம்பரம்
நரம்பு பாதிப்பை குணப்படுத்தும் 8 உணவுகள்.!
மேலும் செய்திகள்…

முதலில் வாய்ஸ் ஓவரில் வீடியோ பதிவிட்டு வந்ததாகவும், பின்னர் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று திரையில் தெரிய ஆரம்பித்ததாகவும் கூறிய ராஜேஷ், ஒரே நாளில் அந்த வீடியோ நான்கரை லட்சம் பார்வையாளர்களை பெற்றதாக விவரிக்கிறார். நாட்டின் பல்வேறு இடங்களில் லாரி ஓட்டிச் செல்லும் போது, அங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு லாரியிலேயே சுவாரஸ்யமான முறையில் சமைத்து சாப்பிடுவதுதான் இவ்வளவு பிரபலமாக முக்கிய காரணம்.

இதையும் படிக்க:
ரூ.1,869 கோடி சம்பளம்… அதிக ஊதியம் பெறும் தமிழர் இவர்தான்!… யார் தெரியுமா?…

விளம்பரம்

லாரி ஓட்டும் வேலை மற்றும் யூடியூப் சேனல் இரண்டையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் ராஜேஷ், தனது சொந்த கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். லாரி ஓட்டுநராக மாதத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், யூடியூப் மூலம் 4 முதல் 5 லட்சம் வரை ரூபாய் சம்பாதிப்பதாகவும் நேர்காணல் ஒன்றில் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் கூட வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மாதம் 500 ரூபாய் கூட வருமானம் இல்லாத ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்து யூடியூப் மூலம் லட்சாதிபதியாகி உள்ள ராஜேஷ், தொடர் முயற்சியால் கனவுகளுக்கு உயிர் கொடுக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Trending News
,
Viral News
,
youtuber

Related posts

J&K’s Contrasting Realities: Terrorist Killed In Encounter As Anti-Israel Protests Erupt Amid Poll Campaigns

SEBI To Tighten The Noose On F&O After ₹1.8 Lakh Crore Loss In Futures & Options: All Investors Eyes Board Meeting Today

Amity University Student Group Mercilessly Thrashes Boy With Hockey Sticks & Fists In Noida; Video Goes Viral