லாலு, தேஜஸ்விக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்!

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு… சார் டிரைலர்!

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்.7ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்!

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் மத்திய அரசு வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்