லாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய் சிகிச்சை: தனியார் மருத்துவமனையில் நடந்தது

மும்பை,

ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயத்தில் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து அதே மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 76 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு இதயத்தில் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்