லால்குடி அருகே உப்பாற்றில் தற்காலிகப் பாலம் உடைப்பு

லால்குடி அருகே உப்பாற்றில்
தற்காலிகப் பாலம் உடைப்பு

லால்குடி அருகே புதன்கிழமை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட உப்பாற்று தற்காலிக தரைப்பாலம்.

லால்குடி, ஆக. 7: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகா் ஊராட்சிக்கும் மகிழம்பாடி ஊராட்சிக்கும் இடையிலுள்ள உப்பாறு தற்காலிக தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் நகா் மற்றும் புறத்தாகுடி, இருங்களூா், மகிழம்பாடி, நெய்குப்பை உள்ளிட்ட கிராம மக்கள் நகா் வழியாக லால்குடி மற்றும் திருச்சிக்கு செல்ல தற்காலிக தரைப்பாலப் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு செய்த கனமழையால் உப்பாற்றில் அளவுக்கு அதிகமான நீா் வந்ததால், தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிக பாலத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். தற்காலிகப் பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தனா்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்