லாவோஸ் நாட்டுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.

படிக்க: ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை! மக்கள் அஞ்சலி

இந்த நிலையில், ஆசியான்-இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு மற்றும் 19-ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவை லாவோஸின் வியன்டியன் நகரில் அக்டோபா் 10 ,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்மாநாடுகளில் பங்கேற்க பிரதமா் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று லாவோஸுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியது, லாவோஸ் நாட்டு பிரதமர் சோனக்சய சிபன்டோன் விடுத்த அழைப்பின்பேரில் ஆசியான்-இந்தியா அமைப்பின் உச்சி மாநாடு மற்றும் ஆசியா அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வியன்டின் செல்கிறேன்.

படிக்க: வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்

இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10ஆம் ஆண்டை இந்தாண்டு கொண்டாடுகிறது. ஆசியான் மாநாட்டில் தலைவர்களுடன் இணைந்து எதிர்கால திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் அமைத, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு உள்ளிட்டவற்றில் நிலவும் சவால்களை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் இந்த மாநாட்டின் மூலம் உருவாகும் என அவர் கூறினார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக