லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் பட டீசர்!

ஹரி பாஸ்கர் – லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் யூடியூபர் ஹரி பாஸ்கருடன் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகாநதி தொடர் நடிகைக்கு குவியும் வாழ்த்து!

இந்த நிலையில், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!