லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய ரயில்வே துறை!

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய ரயில்வே துறை… என்ன காரணம் தெரியுமா?

பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஒரு பொது சேவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் கலந்து கொண்டதற்காக இந்திய ரயில்வே லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 2,140 இடங்களில் நடைபெற்ற விழாவில் 40,19,516 பேர் பங்கேற்று இந்த சாதனை நிகழ காரணமாக இருந்துள்ளனர்.

ரயில்வே மேம்பாலங்கள் / ரயில் பாதையின் கீழே அமைக்கப்படும் சாலைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் நிலையங்களுக்கு பாரத பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டுவதற்காக இந்நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கடினமான ஒரு நிகழ்வை சரியாக திட்டமிட்டு நடத்திய இந்திய ரயில்வே துறைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் லிம்கா சாதனை புத்தகத்திலும் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்திய ரயில்வே துறையின் கடின உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதற்கிடையில் ஏற்கனவே இந்திய ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த அஷ்வினி வைஷ்ணவ் மீண்டும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் கூடுதலாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே துறை ஊழியர்கள் மத்திய அமைச்சர் தனது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது மலர்தூவி வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தினர். மேலும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தனர். எப்போதும் இந்திய ரயில்வே துறையோடு ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்பில் இருக்கும் பிரதமர் மோடிக்கு வைஷ்ணவ் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்த ஒரு கிராமத்திற்காக பாகிஸ்தானுக்கு 12 கிராமங்களை வழங்கிய இந்தியா.. எந்த கிராமம் தெரியுமா?

”இந்திய மக்கள் பிரதமர் மோடியை மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு சேவை செய்ய தேர்வு செய்துள்ளனர். அதில் ரயில்வே துறை மிக முக்கியமான பங்கை வகிக்கவுள்ளது. கடந்த 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரயில்வேயின் முன்னேற்றத்திற்கு பல முக்கிய சேவைகளை செய்துள்ளார். ரயில்களுக்கு தேவைப்படும் மின்சார வசதி, புதிய ரயில் பாதைகள் அமைத்தல், புதுவித ரயில்கள், ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு உள்ளிட்டவை கடந்த 10 வருடங்களில் இந்திய ரயில்வே செய்துள்ள முக்கிய சாதனைகள் ஆகும்” என வைஷ்ணவ் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் ”சாமானிய மக்களின் முக்கிய போக்குவரத்துக்கு ரயில்வே முக்கிய பங்காற்றுவதால் பிரதமர் மோடி இந்திய ரயில்வே துறையை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். இதன் காரணமாகவே இந்திய ரயில்வே மீது பிரதமர் மோடிக்கு ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கம் மற்றும் அதனை நவீனப்படுத்தும் வேலைகளை வைஷ்ணவ் மேற்பார்வையிட உள்ளார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவில் முதியவர்களின் நிலை இதுதான் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக, ஊடகத்துறையில் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதையும் எந்தவித அச்சுறுத்தலுமின்றி ஊடகத்துறை சுதந்திரமாக இயங்குவதையும் உறுதிபடுத்தும் வேலையை மத்திய அமைச்சர் மேற்கொள்வார். மேலும் இத்துறையில் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சரியாக கையாள்வதும் மத்திய அமைச்சரின் பொறுப்பாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?