லியம் லிவிங்ஸ்டனுக்கு பில் சால்ட் புகழாரம்!

இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டனுக்கு அந்த அணியின் கேப்டன் பில் சால்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டனின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய லியம் லிவிங்ஸ்டன் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை: பந்துவீச்சு பயிற்சியாளர்

பில் சால்ட் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியம் லிவிங்ஸ்டனை இங்கிலாந்து அணியின் கேப்டன் பில் சால்ட் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: லிவிங்ஸ்டன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த டி20 தொடரை அவர் மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளார். இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகள் மற்றும் 100-க்கும் அதிகமான ரன்களை அவர் குவித்துள்ளார். மூன்றாவது டி20 போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

கேப்டன் மாறினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்களா? முன்னாள் பாக். வீரர் கேள்வி!

சமனில் உள்ள டி20 தொடர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் நாளை (செப்டம்பர் 15) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!