லெபனானுக்கு விமானங்களை ரத்து செய்த அமீரகம், எகிப்து!

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால், லெபனானுக்குச் செல்லும் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து நாடுகள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த இரு நாள்களில் மட்டும் 558 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால், கிழக்கு – மேற்கு நாடுகளின் பயண முனையமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனான் நாட்டிற்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது. அமீரகத்தின் நீண்ட பயண நேரம் கொண்ட எதிஹாத், ஃபிளைதுபை ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று எகிப்து நாட்டின் ஃபிளாக்‌ஷிப் நிறுவன விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எகிப்து தலைநகர் கைரோவிலிருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு நாள்தோறும் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

அவை இனி தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

போர் பதற்றத்தின் காரணமாக இஸ்ரேலுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஸ்பெயின் நாட்டின் இபிரியா, அஜர்பைஜான் உள்ளிட்ட ஏர்லைன்ஸ்களும் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹிஸ்புல்லா குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் கடந்தவாரம் முழுக்க பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிக்க வைத்து தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த இரு நாள்களில் மட்டும் 558 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதாரத் துறை இன்று அறிவித்தது.

ரஷிய ஆயுதங்களின் 60% பாகங்கள் சீனாவில் தயாரானவை: உக்ரைன்!

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட் வழியாக பாதுகாப்பான நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!