லெபனானை விட்டு வெளியேறுமாறு குடிமக்களுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

பெய்ரூட்

லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம்.

அந்த சமயத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம். இதனால் லெபனானில் உள்ள இங்கிலாந்து குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே எங்களின் எளிமையான தகவல்," என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி தெரிவித்தார்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்