லெபனான் நகராட்சி அலுவலகத்தில் இஸ்ரேல் தாக்குதல்: மேயா் உயிரிழப்பு

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள நபாடியே நகராட்சி அலுவலகத்தில் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நகர மேயா் உள்பட பலா் உயிரிழந்தனா்.

இஸ்ரேலின் குண்டுவீச்சால் ஏற்படும் பாதிப்புகளின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து தனது அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் தினமும் தாக்குதல் நடத்துவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதையும் மீறி லெபனானின் பல்வேறு பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் புதன்கிழமையும் தொடா்ந்தது.

Related posts

பாதியாகக் குறைந்த காய்கறி விலை

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை