லோகார்னோ திரைப்பட விழா – ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற முதல் இந்திய நடிகர்

லோகார்னோ திரைப்பட விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்ற முதல் இந்திய நடிகர் ஷாருக்கான்.

லோகார்னோ,

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் 2002-ல் வெளியான 'தேவதாஸ்' படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா' நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நடந்த 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு, அவர் நடித்த படங்களின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

விருது பெற்ற பின்னர், மேடையில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது, விருதின் எடையைப் பற்றி நகைச்சுவையாகக் கூறினார். லோகார்னோவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் கூட்டத்தை பார்த்து கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார், என்று இவ்வாறு அவர் கூறினார்.

இன்று அங்கு நடைபெறும் விழாவில் 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Global achievement is now an aam baat for #SRK. Another one added in his bucket. Honoured at #Locarno77 Film Festival Switzerland pic.twitter.com/hXtq16oJsp

— अपना Bollywood (@Apna_Bollywood) August 11, 2024

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி