லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள்… பாஜக இழந்ததும்… பெற்றதும்!

பாஜக பெற்றதும் ; இழந்ததும் – லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் சொல்லும் கணக்கு இதுதான்!

பாஜக

கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 63 இடங்களை இழந்திருப்பது மக்கள் மத்தியில் அக்கட்சிக்கான செல்வாக்கு சரிந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரம் வலுவான சவாலை இந்தியா கூட்டணி மூலம் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் கொடுத்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை இழந்தது என்பதை இனி பார்க்கலாம்…

மேற்குவங்கத்தில் முந்திய மம்தா

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்குவங்கத்தில் தனித்து களமிறங்கிய மம்தா பானர்ஜி, இந்த முறை பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை அளித்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 18 இடங்களை வென்றிருந்த பாரதிய ஜனதா, இம்முறை மேற்கு வங்கத்தில் 12 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

விளம்பரம்

காங்கிரசுக்கு “கை” கொடுத்த மகாராஷ்டிரா

மேற்குவங்கத்தில் 6 எம்.பி.களை இழந்த பாரதிய ஜனதா, மகாராஷ்டிராவில் கடந்த முறை வென்றதை விட 14 மக்களவைத் தொகுதிகளை இழந்துள்ளது. அதே நேரம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 13 எம்.பி.களை வென்றுள்ளது. இது கடந்த 2019 மக்களவைத் தேர்தலை விட காங்கிரசுக்கு 12 இடங்கள் அதிகமாகும். மறுபுறம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரும் மகாராஷ்டிரா மக்களிடையே தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிரூபித்துள்ளனர்.

விளம்பரம்

பாஜகவிற்கு “கை” கொடுக்காத உ.பி.

இதேபோல் 80 மக்களவை இடங்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 69 இடங்களை வென்ற பாரதிய ஜனதா, இம்முறை 33 எம்.பி.க்களை மட்டுமே பெற்றுள்ளது. ராகுல் காந்தி – அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு, அதிகரித்த மக்கள் செல்வாக்கு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகா, பிகார், ராஜஸ்தானில் பின்னடைவு

பிகாரில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 17 இடங்களை வென்றிருந்த பாரதிய ஜனதாவிற்கு தற்போது 12 எம்.பி.களே கிடைத்துள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் 2019 மக்களவைத் தேர்தலில் 25 இடங்களை வென்றிருந்த பாரதிய ஜனதா, இந்த தேர்தலில் 17 இடங்களில் மட்டுமே வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. அதே நேரம் கடந்த 2019 தேர்தலில் ஒரு மக்களவை இடத்தை வென்றிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஒன்பது எம்.பி.களை வென்றுள்ளது.

விளம்பரம்இதையும் படிங்க : லோக் சபா தேர்தல் முடிவுகள்; தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம்? – முழு விவரம் இதோ

இதேபோல் ராஜஸ்தானிலும் பாரதிய ஜனதாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உடன் நேரடியாக மோதும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இம்முறை பாரதிய ஜனதாவிற்கு 14 எம்.பி.களே கிடைத்துள்ளனர். கடந்த முறை வென்றதை விட இம்முறை 10 மக்களவை தொகுதிகள் பாரதிய ஜனதாவிற்கு குறைந்துள்ளது.

கேரளாவில் கால் பதித்த பாஜக

அதே நேரம் இதுவரை கால் பதிக்காத கேரளாவில் பாஜகவிற்கு தற்போது ஒரு எம்.பி. கிடைத்துள்ளார். திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வென்றதுடன், கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி. என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்