வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோப்புப்படம்

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று (ஜூலை 19) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20.07.2024) அதிகாலை ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மேற்கு-வடமேற்கே நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஷ்கரைக் கடந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்