வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து டெம்பா பவுமா விலகல்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?

டெம்பா பவுமா விலகல்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவர முடியாத காரணத்தினால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்தும் டெம்பா பவுமா விலகியுள்ளார். இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பவுமா மீண்டும் அணிக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஓராண்டில் விரைவாக 1,000 ரன்கள்..! ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் கூறியதாவது: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு டெம்பா பவுமா இன்னும் குணமடையவில்லை. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்றார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 29 ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?