வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: தெ.ஆ. கேப்டன் பவுமா விலகல்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா விலகியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விளையாடுகிறது.

தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் போட்டி புள்ளிப் பட்டியலில் 38.89 சதவீதத்துடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்தத் தொடரை வென்றால் தென்னாப்பிரிக்க அணி முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

பவுமாக்கு பதிலாக எய்டன் மார்க்கரம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடுகூட இளம் பேட்ஸ்மென் டிவால்ட் பிரேஸ்வலும் அணியில் இணைந்துள்ளார். மேலும், இடுப்பு எலும்பு பிரச்னையால் விலகிய நன்ரே பர்கருக்குப் பதிலாக லுங்கி இங்கிடி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

மிர்புரில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29-ஆம் தேதி சட்டொகிராமிலும் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி:

டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரின்னே, ரியான் ரிகெல்ட்சன்

Related posts

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்ய ஆர்வம்!

குறுகிய காலத்தில் நிறைவடைந்த மீனா தொடர்!

அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி