வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரிப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் காட்ஷிலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா (நவ. 3) கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ''ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் மாநில மக்களுக்கு துரோகமிழைக்கிறார். வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஆதரிப்பதன்மூலம் ஜார்க்கண்ட் சகோதர, சகோதரிகளுக்கு அநீதி இழைக்கிறார். மாநில மக்களின் நலன் காக்க சோரன் அரசு தவறிவிட்டது.
பாஜக ஆட்சி அமைத்தால், நிலங்கள் பழங்குடி மக்களிடம் சேரும் வகையில் சட்டத்தை இயற்றுவோம். ஊடுருபவர்கள் நிலங்களை உரிமை கொண்டாட முடியாத வகையில் சட்டத்தை வலுப்படுத்துவோம்.
ஜார்க்கண்ட்டில் ஒரே பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால், பழங்குடி சமூக மக்கள் அதன் வரம்பிற்குட்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும். மாநிலத்தில் யுசிசி அமல்படுத்தப்பட்டால் பழங்குடியின மக்களின் கலை, கலாசாரம் சீரழிந்து விடும் என வதந்தி பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல'' என அமித் ஷா பேசினார்.
இதையும் படிக்க | ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: ஒமர் அப்துல்லா கண்டனம்