வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்… கராச்சியிலிருந்து மாற்றம் – காரணம் என்ன..?

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 2வது போட்டி வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி கராச்சியிலும் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கராச்சி மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு நடைபெற இருந்த 2வது போட்டியும் ராவல்பிண்டியிலேயே நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து