வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்றது யார் தெரியுமா..?

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின.

ஆண்டிகுவா,

கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டராக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் வழங்கி கவுரவித்தார்.

View this post on Instagram

A post shared by Team India (@indiancricketteam)

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி