வங்காளதேச வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,

வங்காளதேசத்தின் கிழக்கு எல்லையோர மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு இந்தியாவே காரணம் என அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தில் உள்ள டம்பூர் அணையை முன்அறிவிப்பின்றி இரவோடு இரவாக திறந்து விட்டதே வெள்ளத்துக்கு காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச ஊடகங்களின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திரிபுராவில் உள்ள கும்டி ஆற்றின் மேல்பகுதியில் உள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வங்காளதேசத்தில் கவலை எழுந்துள்ளது. இது உண்மையல்ல. கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக மழை பெய்துள்ளது. இதுவே வெள்ளப் பெருக்கு ஏற்பட முதன்மை காரணம் ஆகும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு